சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் TNUSRB-ஆல் நடத்தப்படும் Sub Inspector of Police -க்கான எழுத்து தேர்வு முதல்கட்டமாக Department Quota-க்கும் (11.01.2020) மற்றும் இரண்டாம் கட்டமாக Open Quota- க்கும் (12.01.2020) நடைபெறவுள்ளது.
இத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் I.P.S அவர்கள் உத்தரவின்படி எழுத்துத் தேர்வுக்கான அறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
K. ராமசாமி