சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்குடி மற்றும் மாந்தாலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக 24.12.2019 அன்று காளையார்கோவில் போலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை விற்பனை செய்த சேதுராமன்(58), முருகேசன்(54) மற்றும் சிவகுமார் (32) ஆகியோர் மீது u/s 4(1) (A) TNP Act -ன் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்தனர். மேலும் கொல்லங்குடியில்-419 மது பாட்டில்கள் மற்றும் மாந்தாலியில்-205 மது பாட்டில்கள், மொத்தம்-624 மதுபாட்டில்களை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.