மதுரை : மதுரை , மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டப்படி மேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதன் பேரில் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை வெற்றிகரமாக நடத்தி சிறை தண்டனை பெற்று கொடுத்த மேலூர் மகளிர் போலீசாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை