திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை, கொசவபட்டி பகுதியைச் சேர்ந்த சுஜித் செல்வம் என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரைத் தொடர்ந்து DCRB ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்த சுஜித் செல்வம் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா