ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னை வலசு பகுதியைச் சேர்ந்த தங்க தங்கமுத்து 52 தொழிலாளி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தங்க முத்துவின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் சிறுமிகளை பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். உடனே சிறுமிகளை மீட்டு தங்க முத்துவை பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் தங்கமுத்து சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தால் அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.