அரியலூர் : அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் நகரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் உடையார்பாளையம் நகரின் முக்கிய பகுதிகளில் 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பொருத்தப்பட்ட கேமராக்களை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா வியாபாரிகள் சங்க தலைவர் திரு. ஜவகர் அவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் தலைமையில் உடையார்பாளையம் AVK திருமண மண்டபத்தில் 15.3.2020 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் ரிப்பன் வெட்டி CCTV CAMERA க்களை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்கள். உடன் ஜெயங்கொண்டம் உட்கோட்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மோகனதாஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மூன்றாவது கண்ணான CCTV கேமராக்களை பொருத்துவதன் மூலம் திருட்டு குற்றங்கள் பெருமளவில் குறைந்து வருவதாகவும், இது வீட்டிற்கும் மற்றும் நகருக்கும் மிகவும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும் அப்பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் கண்டறியவும் பேருதவியாக அமையும்.
உடையார்பாளையம் நகரம் பகுதியை முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் மக்கள் காவல்துறைக்கு ஆதரவு தரவேண்டும். மேலும் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த மக்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த சிசிடிவி கேமரா திறப்பு விழாவில் வியாபார சங்க உறுப்பினர்கள் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.