திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இருந்து காட்டூர் செல்லும் சாலையின் குறுக்கே இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால் அரியன்வாயல் முதல் திருவெற்றியூர் நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முறையாக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்வதற்கு அவகாசம் கொடுத்தனர்.
ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராத காரணத்தினால் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் வடிவரசி தலைமையில் ஜேசிபி மற்றும் பொக்லின் இயந்திரங்கள் கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. முன்னதாக மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மின்சாரத்தை துண்டித்து இடிபாடுகளில் மின்கம்பிகள் சிக்கி விபத்து ஏற்படாத வண்ணம் மின் ஒயர்களை கழற்றினர்.
பின்னர் உயரமான இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்கள் முதல் தரைமட்டத்தில் இருந்த கட்டிடங்கள் வரை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது துணை வட்டாட்சியர் செந்தில் முருகன், வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன்,செயல் அலுவலர் முத்துக்குமார், கௌதமன், கிராம நிர்வாக உதவியாளர் ஹரிபாபு, அலுவலக உதவியாளர் பாஸ்கரன், சுப்பிரமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















