திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த திரு.கோவிந்தசாமி,HC125 அவர்கள் நடந்த முடிந்த 2019 -ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை குழுவில் பணியில் இருந்தபோது, கடந்த 10/04/2019 அன்று அதிகாலை சுமார் 03.30மணிக்கு அவர்கள் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக புதுவாயல் அருகில் விபத்துக்குள்ளானது.
அதில் அந்த வாகனத்தில் இருந்த திரு. கோவிந்தசாமி என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேற்படி திரு. கோவிந்தசாமி பணியில் இருந்தபோது உயிரிழந்தது, தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. இரா.பொன்னி IPS அவர்களால் உடனடியாக உயர் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஊத்துக்கோட்டை பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் திருமதி. ஹரிதாரவி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த திரு. கோவிந்தசாமி அவர்கள் பாரத் ஸ்டேட் வங்கியில் SALARY PACKAGE SCHEME -ல் இணைந்து இருந்ததால் இழப்பீடாக பாரத் ஸ்டேட் வங்கி சார்பாக (30,00,000 /- லட்சம் மட்டும்) அவரது குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இன்று 06/12/2019 இதுசம்பந்தமாக அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இழப்பீடு தொகை 30,00,000 /- பாரத் ஸ்டேட் வங்கி சார்பாக வழங்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உயிரிழந்த திரு. கோவிந்தசாமி என்பவரின் மனைவி திருமதி. லீலாவதி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்