அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 100% தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர மோட்டார் வாகன பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை ஏற்று பேரணியை துவக்கி வைத்து தாமும் கலந்துகொண்டார். இந்தப் பேரணி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ஆரம்பித்து பேருந்து நிலையம், கடைவீதி வழியாக சென்று இறுதியாக AVK திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.