திண்டுக்கல் : 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவின் 2-ம் நாளான இன்று 21.01.2020 செவ்வாய்க்கிழமை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை தமிழக வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜய லட்சுமி அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். மேலும் இப்பேரணியில் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நடைபயணமாக சென்றனர். சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அமைச்சர் அவர்கள் ரோஜாப்பூ வழங்கி தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா