தென்காசி : திருநெல்வேலி மாவட்டம் 26.09.2019 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஞான ரூபி பரிமளா அவர்கள் யானைபாலம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் இந்த மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றியும் அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலை குறித்தும் கூறி ஆலோசனை வழங்கினார்.