சென்னை : கொரோனா நோய் பரவுதல் இந்தியாவில் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழை-எளிய மக்களுக்கும் சென்னை பெருநகர தூய்மை பணியாளர்களுக்கும், சாலையோர மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட ப்பட்டது. தென் சென்னையின் பல பகுதிகளிலும் உணவு வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நடைபெற்று வருகின்றது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்களால், சென்னை மாநகரம் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், போரூர், ஐய்யப்பந்தங்கள் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (11.07.2020) கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழை-எளிய மக்களுக்கும் சாலையோர மக்களுக்கும், மக்களைத் தேடிச் சென்று, சனிடைசர் உபயோகப்படுத்தி கைகளை சுத்தம் செய்ய சொல்லி, சமூக இடைவெளி விட்டு வரிசைப்படுத்தி, முககவசம் வழங்கி, பின்பு உணவு மற்றும் தண்ணீர் பாட்டிலும் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
முக கவசம் அணிவோம் !
சமூக இடைவெளியை பின்பற்றுவோம் !
கொரோனாவை விரட்டுவோம் !
மனித நேயம் காப்போம் !