அரியலூர்: கொரோனா நோய் பரவுதல் காரணமாக
நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை செம்மையாக செயல்படுத்த காவல்துறையினர் சாலைகளில் கடும் வெயிலிலும் பணியாற்றி வருகின்றனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் 02/04/2020 அன்று அரியலூர் அண்ணா சிலை மற்றும் கலெக்டர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் பணியில் இருந்த காவல் ஆளிநர்களுக்கு கோடை வெயில் வெப்பத்தைத் தணித்து உற்சாகமாக காவல் பணி செய்திட பழச்சாறு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
காவலர்களை அவர்களது உடல்நிலையில் அக்கறை கொள்ளுமாறு அறிவுறுத்தினார். உடன் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.S. மதிவாணன் அவர்கள் இருந்தார்.