நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட தனலட்சுமி (65) என்ற மூதாட்டி சாலையில் சுற்றித்திரிந்த அந்த மூதாட்டியை மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு நேரம் என்பதால் அருகில் இருந்த காப்பகத்தில் தங்க வைத்து பின்னர் தகவலர்கள் உதவி உடன் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்த போது பனையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி என தெரிய வந்தது.
இதனால் தனது பிள்ளைகள் அந்த மூதாட்டியை கவனித்து கொள்வது இல்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறினர் என்பதும் நீடூரில் உள்ள மூதாட்டியின் சகோதரரி மற்றும் பிள்ளைகளை தொடர்பு கொண்டு மூதாட்டி தனலட்சுமியை நல்லமுறையில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி கோப்பெருந்தேவி ஒப்படைத்தார் இந்த மனிதநேய செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் திருமதி.தனலெட்சுமி PC-1798,திருமதி.அஸ்வினி PC-1396 ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.