மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே கண்டெடுத்த 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் கொடுத்து நகையின் உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜா (21) என்பவரை பாராட்டி DCB DSP திருமதி. விநோதினி அவர்கள் Good Citizen Award சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார். காவல் ஆய்வாளர் திரு.ராமநாராயணன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்