திண்டுக்கல் : சென்ற 2019 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) களுக்கான எழுத்து தேர்வு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் சரகம் பழனி சாலையில் அமைந்துள்ள PSNA பொறியியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெறும். சார்பு ஆய்வாளர் (பொது ஒதுக்கீடு) எழுத்து தேர்வு 12.1.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12.30மணி வரை நடைபெறும். சார்பு ஆய்வாளர் (துறை ஒதுக்கீடு ) எழுத்தர் தேர்வு 13.1.2020 திங்கட்கிழமை நடைபெறும்.
தேர்வு எழுத வரும் அனைத்து விண்ணப்பதாரர்கள் காலை 8 மணிக்குள் தவறாமல் தேர்வு மையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம். மேற்படி தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா, நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மற்றுமே கொண்டு வர வேண்டும்.அலைபேசி மற்றும் கால்குலேட்டர் உட்பட எவ்வித பொருட்களையும் தேர்வு வளாகத்திற்குள் கொண்டு வரக் கூடாது எனவும் காலை10.15 மணிக்கு மேல் காலம் தாழ்த்தி வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணமும் கொண்டு அனுமதிக்க படமாட்டாது என மாவட்ட கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுத வரும் அனைவருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா