கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி கல்வராயன்மலை பகுதியில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கோடு திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி கவிதா அவர்களின் தலைமையிலான காவல் ஆளினர்கள் சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தினர் உடனே காரின் பின் இருக்கையிலிருந்தவர் இறங்கி ஒடிவிட ஒட்டுநரை கைதுசெய்து, வாகனத்தை சோதனை செய்ததில், 20 சாக்கு மூட்டைகளில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் வெல்லம் மற்றும் இரண்டு லாரி டயூப்களில் 120 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. எனவே சாராயம் கடத்திவரப்பட்ட காரை பறிமுதல் செய்து ஒட்டுநர் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்