அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கியிருக்கும் SAM சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பங்களுக்கு ஜீவகாருண்ய நண்பர்கள் குழு என்ற அமைப்பின் சார்பில் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வசந்த் மற்றும் திரு.முருகன், காவல் துறையினர் இணைந்து சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், இனிப்புகள் மற்றும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
மேலும் சாலையோரத்தில் வசித்து வந்த வயதானவருக்கு வேட்டி, துண்டு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் பாலினத்தவர்க்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.