இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் காவல்நிலைய சரகம் தேர்போகி கிராமத்தில் மாடசாமி கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக கடந்த 10.05.2024-ம் தேதி இரவு ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்படி பிரச்சனையில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 8 குற்றவாளிகள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வளைதளங்களில் பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.