தேனி: தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி, காவல் உதவி ஆய்வாளர் திரு.தினகரபாண்டியன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஈஸ்வரன், தலைமை காவலர் திரு.ஐயப்பன், தலைமை காவலர் திரு.பிரபு, காவலர் திரு. சித்ரேசன் (தனிப்பிரிவு) ஆகியோர்கள் விரைந்து சென்று கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வெள்ளைச்சாமி (53), வெற்றிபாண்டியன் (32) ஆகிய இருவரையும் கைது செய்து பிரிவு 8(c) r/w 20(b) ii (B) NDPS Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்து 5-கிலோ கிராம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.