தருமபுரி: நாடு முழுவதும் வருகின்ற ஜூலை மாதம் -ம் தேதி முதல் காவல் துறையில் வழக்கத்தில் உள்ள (IPC, Crpc,IEA) சட்டத்தின் பெயர் மற்றும் வழக்கு பிரிவுகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக இணைக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் வழக்கு பிரிவுகள் குறித்து அனைத்து மாவட்டங்களிளும் ஐந்து நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தருமபுரி உட்கோட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் அவர்கள் மற்றும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடன் இருந்தனர். இதே போன்று பென்னாகரம், பாலக்கோடு உட்கோட்ட போலீசாருக்கு நல்லனூர் மற்றும் ஜெயம் கல்லூரியிலும் அரூர் உட்கோட்ட போலீசாருக்கு அரூர் அருகே உள்ள ஜெயம் வித்யாலயா பள்ளியிலும் சுழற்சி முறையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.