கோவை :கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வீடுகளில் ஆட்கள் இருக்கும்பொழுது வீட்டினுள் புகுந்து அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. அடிக்கடி இதுபோல சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் பொது மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் பற்றிய Video Footage யை வைத்து விசாரித்த தனி படையினருக்கு குற்றவாளிகள் பற்றிய எவ்வித விவரமும் கிடைக்காத நிலையில், காவல்துறை துணை தலைவர்(DIG) திரு.நரேந்திரன் நாயர், IPS அவர்கள் உத்தரவுபடி காவல் கண்காணிப்பாளர் திரு.அருளரசு அவர்கள் மேற்பார்வையில், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.அனிதா ( Crime intelligence) தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சூர்யமூர்த்தி , காவல் ஆய்வாளர் திரு. சுந்தர பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் திரு.பாண்டியராஜ், திரு.ராதாகிருஸ்ணன், தலைமை காவலர் மகாராஜன், முதல் நிலைகாவலர்கள் திரு.சந்துரு, ஆறுமுகம் மற்றும் காவலர் வரதன் ஆகியோர் அடங்கிய இரண்டு தனிப்படையினர் ஏற்பாடு செய்யப்பட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டது.
தனிப்படையினர் இன் தீவிரமான விசாரணையின் மூலம் இவ்வழக்கில் தொடர்புடைய Korova Community யை சேர்ந்த மூன்று நபர்களை தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களிடமிருந்து 10 சவரன் நகைகளை மீட்டனர். தனிப்படையினருக்கு CCTV footage மூலம் கிடைத்த சிறு தடயம் மூலம் மேற்கொண்டு குற்றவாளிகளை தனிப்படையினர் பிடித்தனர்.
இவ்வழக்கில் மிகவும் திறமையாக செயல்பட்டு பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்திய வண்ணம் இருந்த டிரௌசர் குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினர் உயர் அதிகாரிகள் பாராட்டு சிறப்பித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்