கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 வரை பெற்றுக் கொண்ட சிவகுமார், பட்டா பெறாமல் சந்தான லட்சுமியை அலைக்கழித்ததோடுமட்டுமல்லாமல், பத்திரத்தை திருப்பி கேட்டபோது, ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான், பத்திரத்தை திருப்பி தருவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக சந்தான லட்சுமி, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் திரு அரவிந்தராஜன் அவர்கள் வழக்கு பதிவு செய்து பணம் ஏமாற்றிய சிவகுமார் என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்