கோவை : கோவை சரக D.I.G விஜயகுமார் இன்று காலை 6.00 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். விஜயகுமார் கடந்த 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது, கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முதல்வர் D.I.G விஜயகுமார் மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் தனது பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த D.I.G விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்களை தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்