கோவை : கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக திகழ்ந்த, மேட்டுப்பாளையம் ஊர்க்காவல் படைப் பிரிவின் முன்னாள் கம்பெனி கமாண்டராக பொறுப்பு வகித்த உயர்திரு.A.செபாஸ்டியன் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறோம்.
ஊர்க்காவல் படை மீது அவர் கொண்ட மாபெரும் பற்று, 1973ல் இருந்து 2012 வரை மேட்டுப்பாளைம் ஊர்க்காவல் படையின் அனைத்து பணிகளையும் சிரமேற்கொண்டு செய்தவர். தகவல் தொடர்பு வசதிகளோ, வாகன வசதியோ இல்லாத கால கட்டங்களில் 1970, 1980, 1990களில் சைக்கிளில் ஒவ்வொருவர் வீடாக சென்று பாதுகாப்பு பணிக்கு வீரர்களை அழைத்து வந்தவர். தன் குடும்பத்தை விட, ஊர்க்காவல் படையை மிகவும் அதிகமாக நேசித்தவர்..!! ஊர்க்காவல்படையில் 30 ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியதற்காக மேதகு குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர்.
2007ல் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் கூட ஊர்க்காவல் படை அலுவலக பணிகளை இரவு, பகல் பாராது தொய்வில்லாமல் மேற்கொண்டவர்.தன் குடும்பத்தை விட, ஊர்க்காவல் படையை மிகவும் அதிகமாக நேசித்தவர்..!! அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்