கோயம்புத்தூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை முத்தண்ணன் குளம் ,உக்கடம் பெரியகுளம் |வாலாங்குளம் உள்ளிட்ட குளக் கரைகள் அழகு படுத்தப்பட்டு வருகிறது.இங்கு வண்ண விளக்குகள். பூங்காக்கள், நடைப்பயிற்சி பாதை உடற்பயற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவை முத்தண்ணன் குளத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்துஅப்புறப்படுத்தப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்த அரசியல் கட்சி அலுவலகங்களும் இடிக்கப்பட்டது. இந்த நிலையில்அந்த பகுதியில் இருந்த 5 கோவில்கள் இடிக்காமல் இருந்தது. அந்த கோயில்க.ளை இன்று மாநகராட்சி அதிகாரிகர் ஜே.சி.பி மூலம் இடித்து அப்புறபடுத்தினாகள்..இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்