கோவை: கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், ‘புனித மரியன்னை’ அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம், புலியகுளத்தை சேர்ந்த மரிய ஆண்டனி ராஜ், 55 என்பவர் தாளாளராக உள்ளார். நேற்று முன்தினம்(நவ.,20) பள்ளியில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவிகளை அழைத்த தாளாளர், தனது மொபைல்போனில் சில, ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்து கொடுக்குமாறு தெரிவித்தார்.
அவரது மொபைல்போனை மாணவிகள் வாங்கி பார்த்தபோது, அதில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இதை மாணவிகள் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தாளாளர் கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர், கொடுத்த புகாரின் பெயரில், அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவல் அதிகாரிகள் ஆண்டனி ராஜ் கைது செய்துள்ளனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி