கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பீகாரை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் தன்னை நிர்வாணப்படுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பீகாரை சேர்ந்த அந்த மாணவன் புகார் அளித்த நிலையில், 4 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், புகார் அளித்த மாணவன் தான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், அவன் பொய் புகார் அளித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். விசாரணையில் உண்மை தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்