கோவை: கோவை மாவட்டம் நெகமம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த தமிழ்முரசு என்பவருக்கு சொந்தமான வீட்டை பாலக்காட்டை சேர்ந்த பிரபு மற்றும் சரவணன் ஆகியோர்கள் வாட்டர் சப்ளை செய்வதற்காக வீடு வேண்டும் என கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.பின்பு எரிசாராயத்தை கேன்களில் அடைத்து வைத்திருந்தனர்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்ததில், எரி சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக பேரூர் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் தமிழரசு என்பவரை கைது செய்து, சுமார் 9940 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள பிரபு, சரவணன் ஆகியோர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்