கோவை : கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா) பதுக்கிவைத்து விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோவையில் நேற்று போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கடையில் மறைத்து வைத்திருந்த 300க்கு மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக 13 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இதைப்போல கோவையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இரவு 10 மணிக்கு மேல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்