தென்காசி : தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் ஐந்தாம் நாள் மண்டகபடியினை புளியரை காவல்துறையினர் கடந்த 40 வருடங்களாக நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் மண்டகப்படியை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் திரு கோகுலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திரு சுரேஷ்குமார் அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திரு.ஷியாம் சுந்தர் அவர்கள் செல்வி.ஞான ரூபி பரிமளா அவர்கள் மற்றும் புளியரை காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் சமூக நல்லிணக்க கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இது போன்ற நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் என பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்பளித்தனர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்