இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் உள்ள ஸ்ரீசுந்தரராஜ
பெருமாள் சித்திரை கோடை திருவிழா முக்கிய நிகழ்வாக கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்வானது (04.05.2023), அன்று இரவு முதல் தொடங்கி மறுநாள் (05.05.2023) அன்று அதிகாலை வரை நடைபெறுவதை முன்னிட்டு (05.05.2023) அன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பரமக்குடி வட்டம் முழுவதும் உள்ளுூர்
விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு (20.05.2023) அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் பரமக்குடி வட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் (20.05.2023)அன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி















