சென்னை: சென்னை, ஆவடி, கோவில்பதாகை, வன்னியர் தெருவில் வசித்து வந்த வீரராகவன், வ/66 (முன்னாள் வார்டு கவுன்சிலர்) என்பவர் கடந்த 16.11.2016 அன்று கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். மேற்படி கொலை தொடர்பாக T-7, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு.டில்லிபாபு வழக்கு பதிவு செய்து, குற்றவாளி பத்து (எ) பத்மநாபன், வ/47, ஆவடி என்பவரை கைது செய்தார். தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்ற திரு.S.ஜெய்கிருஷ்ணன் (தற்போது T-9 பட்டாபிராம் கா.நி. ஆய்வாளர்) அவர்கள் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 14 சாட்சியங்களையும் குறித்த தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அரசு வழக்கறிஞரை அவ்வப்போது சந்தித்து வழக்கு குறித்த விவரங்களை எடுத்துரைத்துள்ளார்.
பின்னர் பொறுப்பேற்ற ஆய்வாளர் திரு.M.நடராஜ் அவர்கள் வழக்கு விசாரணையை நடத்தி முடித்து கடந்த 10.03.2020 அன்று குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர்கள் திரு.S.ஜெய்கிருஷ்ணன், திரு.M.நடராஜ் மற்றும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற பணிகளை கவனித்து வந்த முதல்நிலை பெண் காவலர் திருமதி.D.ஜான்சிராணி (மு.நி.கா.29552) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 12.03.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை