சென்னை: S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.வினோத்குமார் (மு.நி.கா. 45068) என்பவர் 17.10.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது,
அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (18.10.2021) மீனம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே நின்றிருந்த 6 நபர்களை விசாரணை செய்ய முயன்றபோது, 6 நபர்களும் ஓடவே, காவலர் திரு.வினோத்குமார் துரத்திச் சென்று இருவரை பிடித்து, அவர்களிடமிருந்து கத்தியை கைப்பற்றுதல் செய்து, S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ராஜேஷ், 26, நங்கநல்லூர் மற்றும் பரத்குமார், 21, நங்கநல்லூர் என்பதும், மற்ற நபர்களுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பைச் சேர்ந்த நபரை கொலை செய்ய கத்திகளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், ராஜேஷ், மற்றும் பரத் ஆகியோருடன் தொடர்புடைய மேலும் 9 குற்றவாளிகள் என மொத்தம் 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 4 கத்திகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.வினோத்குமார் (மு.நி.கா. 45068) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்