சேலம்: சேலம் மாநகரம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொலைக் குற்றவாளிகள் 1.காமராஜ், 2.பிரேம், 3.பிரசாந்த், 4.வெள்ளைமணி, 5.ரமேஷ் 6.மணிவசகம் ஆகியோருக்கும் இடையே ஏரியாவில் யாருக்கு பலம் அதிகம் என்ற மோதலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் மாநகர காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு மேற்படி எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த நகர காவல் ஆய்வாளர் திரு.A.சரவணன், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.B.குமார் மற்றும் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி.D.புஸ்பராணி ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படையினரை சேலம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.