திருப்பூர் : திருப்பூர் மாநகரம், சோளிபாளையம் கிராமத்தில், முத்துலட்சுமி என்பவரை கொலை செய்து வீட்டில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் சுமார் பத்து லட்சம் திருடப்பட்ட தகவல் கிடைத்தவுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.பிரபாகரன், இ.கா.ப. அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் திரு.அபினவ் குமார், இ.கா.ப. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டும், குற்றவாளிகளைக் கண்டறிய கொங்கு நகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.அனில்குமார், மற்றும் அனுப்பர்பாளையம் சரக காவல் உதவி ஆணையர் திரு.நல்லசிவம், ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டதில், மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளையும் மற்றும் ரூ. 9,82,000 பணம் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினர் அனைவரையும் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். செ.சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார்கள்.
















