தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி,சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதவி ஆய்வாளர் திருமதி விமலா அவர்கள் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரும் படியும்,வீட்டுக்கு செல்லும் போது கைகளை சோப்பு போட்டு கழுவி செல்ல வேண்டும் இதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.