நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தல் படி நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையினர் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மேலும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க கொரோனா வைரஸ் உருவ கோலத்தை வரைந்து கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்கள்.