நாகப்பட்டினம் : இந்தக் குழுவில் 10 பேர் கொண்ட காவலர்கள் 24 மணிநேரமும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்த நிலையில் பணியில் இருப்பார்கள். கொரோனா வைரஸ் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு டாக்டர் குழுவினருடன் இணைந்து தேவைப்பட்டால் இந்த காவலர் குழுவினர்கள் உதவி செய்வார்கள். அதேபோல் கொரோனா தனி வார்டில் இருந்து நோயாளிகள் தப்பிச் சென்று விடாமல் அவர்களை கண்காணிக்கும் பணியிலும் இந்த காவலர் குழுவினர் ஈடுபடுகின்றனர். இந்த காவல் குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின்பேரில் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருப்பார்கள். அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கொரோனா மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.