நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஓ.எஸ் மணியன்.அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு பிரவீன் பி நாயர். இ.ஆ.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க உரிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.