சென்னை : கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக பாரதிதாசன் நகர், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு இன்று (18.04.2020) அரிசி மற்றும் தேவையான காய்கறிகள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் பொதுமக்களுக்கு கொரானா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்றச்செய்து 3கிலோ அரிசி, 1கிலோ தக்காளி, 1கிலோ கத்திரிக்காய், 1கிலோ பெரிய வெங்காயம், 1கிலோ புடலங்காய், 1/2 கிலோ சர்க்கரை, ஒரு கட்டு (மல்லி, புதினா மற்றும் கருவேப்பிலை) ஆகிய அன்றாட தேவையான காய்கறிகள் வழங்கினார்.
முதியோர், வசதி குறைந்தோர், சிறப்புத் தேவையுடையோர் ஆகியோருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ், பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் காய்கறிகளை வழங்கினார்கள்.
கடுமையான அலுவலக பணிகளுக்கு இடையே எளியோருக்கு உதவ, முன்னின்று, பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்ற செய்து, அதன் மூலம் பல குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் சென்றடைய உதவியாக இருந்த வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரசாங்கம் அனைவரையும் பாதுகாத்து, கொரானா இல்லாத சமுதாயத்தை உருவாக்க முயன்று வரும் வேளையில், சமூக சேவையின் பங்கு தொடர்ந்து முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாரதிதாசன் நகர், ஆலப்பாக்கம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வினியோக நிகழ்ச்சி நடைபெற இருந்ததை தொடர்ந்து அன்று காலையில் நமது தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தம் செய்தனர்.