மதுரை: மதுரை மாநகர் கொடிக்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை (25.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலங்கள் எனவே நீங்கள் இன்று சரியான பாதையை நோக்கி பயணித்தால்தான் நாளைய எதிர்காலம் சிறப்பாக அமையும், எனவே இன்றைய மாணவர்களாகிய நீங்கள் மழை நீர்சேமிப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு, நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்றவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டார். கண்மாயில் உள்ள நெகிழிகள் மற்றும் குப்பைகளை அகற்றி மழைகாலங்களில் கண்மாயில் நீர் சேமிப்பை அதிகரிக்க மதுரை HCL நிறுவனத்தார், தானம் அறக்கட்டளை நண்பர்கள், மதுரை மாநகர ஆயுதப்படை காவலர்கள் 50 பேர் மற்றும் மதுரை டான் பாஸ்கோ பள்ளி மாணவர்கள் 100 பேர் இணைந்து கொடிக்குளம் கண்மாய் பகுதியை சுத்தம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை