கடலூர் : தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் கார்த்திகேயன் கடந்த மாதம் 20 ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தரையில் கிடந்த தேசியக்கொடியை உடனடியாக மீட்டார்.
அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காவலர் கார்த்திகேயனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் அழைத்து வெகுமதி தந்து பாராட்டு பத்திரம் வழங்கினார்.