திருச்சி : திருச்சி மாவட்டம் குழுமணி ஊராட்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் பேரணி நடைபெற்றது.
பேரணியை குழுமணி ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தொடங்கிவைத்தார் .மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி கூற அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் பியர்லின் தலைமை தாங்கினார் .திட்ட மேலாளர் கௌதம் முன்னிலை வகித்தார். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை பாதுகாப்பு ,குழந்தை திருமண தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து பேசினார்கள்.
மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாகனங்களிலும், கடை நிறுவனங்களிலும் ஒட்டப்பட்டது .இப்பேரணியில் சுய உதவிக்குழு பெண்கள், கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி