புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை மூலம் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் .
சிறப்பு விருந்தினராக குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு குழந்தை உரிமை, குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் ,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியை முதுகலை சமூகப்பணி துறை மாணவி நிவேதா செய்திருந்தார். இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி