சென்னை : “PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பரையாற்றினார்.
நேற்று 19 11 2019 Prevention of child abuse day முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு சார்பாக மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார்.
திருமதி.H.ஜெயலட்சுமி, காவல் துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்கள், பள்ளியின் புரவளர் திருமதி.நித்தியா குகன் அவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் POCSO ACT தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டினை பள்ளி புலவர் திருமதி.நித்தியா குகன் அவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவற்றில் சில :-
1) காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும் செயலாற்ற வேண்டும் !
2) குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு சென்னை மாநகர காவல்துறை பாடுப்பட்டு வருகிறது.
3) வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகள் அந்த பாதிப்பு குறித்து தங்கள் பெற்றோர், ஆசிரியர் அல்லது சகோதர சகோதரிடம் தெரிவிக்க வேண்டும்.
04) மிகவும் அறிமுகமான-நெருங்கி பழகிய நபர்களும்கூட பெண் குழந்தைகளிடம் தவறான நோக்கில் தொட்டு பேசுதல் – சில்மிசம் செய்தல் போன்ற தவறான முறையில் நடந்து கொள்கின்றனர். அதற்காக எல்லோரையும் சந்தேகப்படவும் வேண்டியதில்லை.
05) ஆனால் எப்போதும் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
06) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உட்பட அனைத்து குற்றங்களையும் தடுக்க காவல்துறைக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சென்னை மாநகர காவல் துறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கு அம்மா ரோந்து வாகனங்களில் சென்று குழந்தைகளுக்கு POCSO ACT தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பள்ளிகளுக்கு விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.