திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக உள்ள திரு.அரவிந்தன், IPS அவர்கள் அங்கு மப்பேடு காவல் சரகத்திற்கு உட்பட தேவர்கடையன் தாங்கல் குளத்தை தத்தெடுத்து, அதனை ஊர் பொதுமக்கள் மற்றும் திருவள்ளூர் காவல்துறையினர் இணைந்து, குளத்தினை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு ஊராட்சிக்கு சொந்தமான காந்தி பேட்டை பகுதியில் தேவர்கடியார் தாங்கள் குளத்தை தூர்வாரும் பணியை 07/10/2019 இன்று பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருவள்ளூர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இவர் தென்காசி ASP யாக இருந்த போது தென்காசியில் உள்ள சமூக அமைப்புளை திரட்டி குளம் சீரமைப்பு பல சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அதில் சீவலப்பேரிகுளமும் அடங்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி சுமைகளுக்கிடையே சுற்று சூழலில் அக்கறை கொண்டு அதனை திறம்பட செயலாற்றி வரும் திரு.அரவிந்தன்,IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்