மதுரை : மதுரை மாநகர் விஸ்வநாதன் நகர், கோ.புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய மகன் ஆனந்தன் என்ற ஆனந்தரங்கன் 23/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்பாணி கோவில் தெரு, மதிச்சியத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருடைய மகன் மீனாட்சிசுந்தரம் 22/19 இவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் மதுரை கோட்டை தெரு, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சேது என்பவருடைய மகன் சரத்குமார் என்ற சரத் 25/19 இவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (14.11.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை