திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட தகவலின் பேரில் புத்தூர் கீழ வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த வெங்கி (எ) வெங்கடேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் குற்றவாளி வெங்கி (எ) வெங்கடேசன் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 2 வழக்குகள் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவருகிறது.
மேலும் குற்றவாளி வெங்கி (எ) வெங்கடேசன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.