தர்மபுரி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தை சேர்ந்த, தனம் என்ற பெண்ணின் வீட்டிற்குள், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர், நுழைந்து தனத்தை தாக்கி கொன்றார். மேலும் தனத்தை காப்பாற்ற சென்ற புதுசத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், தலைமை காவலர் திரு கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் சிலர் மீது சாமுவேல் ஆசிட் வீசினார்.
இதில் காவலர் பலத்த காயமும் பொதுமக்கள் லேசான காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் முருகானந்தம் மற்றும் கார்த்திகேயனின் மருத்துவச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்றும், இவர்களது தீய செயலையும், கடமை உணர்வையும், பாராட்டுவதோடு அவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்த பொதுமக்கள் 13 பேருக்கு, தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.